/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணம் என்ன?
/
கள்ளக்குறிச்சியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணம் என்ன?
கள்ளக்குறிச்சியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணம் என்ன?
கள்ளக்குறிச்சியில் ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணம் என்ன?
ADDED : ஏப் 23, 2024 06:20 AM
திருக்கோவிலூர் : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் ஓட்டு சதவீதம் அதிகரித்திருப்பது யாருக்கு சாதகம் என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி தொகுதியில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - நாம் தமிழர் கட்சி என 8 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை உட்பட 21 பேர் களத்தில் இருந்தனர். இருப்பினும் தி.மு.க., - அ.தி.மு.க., இடையே தான் நேரடி போட்டி நிலவியது.
இத் தொகுதியில், சேலம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் தலா 3 தொகுதிகள் இடம் பெறுகிறது. கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தை துவங்குவதற்கு முன்பாகவே கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தேர்தல் களம் அனல் பறக்க துவங்கியது. இதற்குக் காரணம், போட்டிக்கு நாங்கள் தயார், நீங்கள் ரெடியா என அரைகூவல் விடுத்த தி.மு.க., மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன்.
இதனால் சூடாகிப் போன அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் குமரகுரு போட்டிக்கு நானே தயார் என அறிவித்தார். அன்றிலிருந்து ஓட்டுப்பதிவு தினமான கடந்த 19ம் தேதி மாலை 6:00 மணி வரை கள்ளக்குறிச்சி தேர்தல் களம் கொதி நிலையிலேயே இருந்தது.
ஆளும் தி.மு.க., வும், எதிர்கட்சியான அ.தி.மு.க., வும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை என்ற அடிப்படையில் செயல்வீரர்கள் கூட்டம், வேட்பாளர் அறிமுக கூட்டம், வாக்காளர்கள் கவனிப்பு, பூத் செலவிற்கு பணம் பட்டுவாடா என போட்டி போட்டுக் கொண்டு செலவு செய்தனர்.
இதனால் கள்ளக்குறிச்சி தொகுதியில் 79.18 சதவீதம் அளவிற்கு ஓட்டு பதிவாகியது. தி.மு.க., மற்றும் அதன் மாவட்ட செயலாளர் மீது மக்கள் கொண்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகவே ஓட்டு சதவீதம் அதிகரித்து இருப்பதாக அ.தி.மு.க., வினர் கூறி வருகின்றனர். தி.மு.க., வினரோ, அரசின் நலத்திட்டங்களும், தங்களின் தீவிர தேர்தல் பணியும்தான் ஓட்டு சதவீதம் அதிகரிக்க காரணம் என கூறுகின்றனர்.
இப்பகுதியில் சற்று பலத்துடன் இருக்கும் தே.மு.தி.க., வுடன் கூட்டணி வைத்தது, அ.தி.மு.க., வுக்கு பலம் என்றால், தி.மு.க.,வும் பெங்களூரு உள்ளிட்ட வெளியூர் சென்றிருந்த வாக்காளர்களை அழைத்து வந்தது, பதவியை வைத்து நிர்வாகிகளை மிரட்டி பணி செய்தது போன்றவை தி.மு.க., விற்கு சாதகம்.
இருதரப்பிலும் உள்ளாட்சித் தேர்தலைப் போன்று, உள்ளூர் கட்சியினர் வரிந்து கட்டிக் கொண்டு களம் இறங்கியது, ஓட்டுப்பதிவு அதிகரிக்க காரணம் என நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். இந்த விவாதத்திற்கு எல்லாம் வரும் ஜூன் 4ம் தேதி விடை கிடைக்கும்.

