/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எப்போது, என்ன கொடுப்பார்கள்... ஓட்டு போட்டு விட்டு டோக்கனுடன் காத்திருக்கும் வாக்காளர்கள்

ADDED : ஏப் 30, 2024 08:10 AM
கள்ளக்குறிச்சி தொகுதியில் தேர்தலுக்கு முன் தி.மு.க.,வினர் கொடுத்த டோக்கனை வைத்துக்கொண்டு அதற்கு என்ன கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்புடன் ஓட்டு போட்ட வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் தி.மு.க., வேட்பாளர் மலையரசனுக்கும் அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
கடந்த 19ம் தேதி தேர்தல் முடிந்த நிலையில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என இருதரப்பினரும் மார்தட்டி வருகின்றனர்.
தேர்தலுக்கு முன் இருவருமே ஓட்டுக்கு பணம் கொடுத்தனர். முதலில் தி.மு.க., தரப்பில் 300 ரூபாய் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க.,வினரும் வாக்காளர்களுக்கு 300 ரூபாய் கொடுத்தனர்.
இதை சற்றும் எதிர்பாராத தி.மு.க., தரப்பு உடனடியாக கூடுதலாக 100 ரூபாய் விநியோகம் செய்தனர். மேலும் பல இடங்களில் டோக்கனும் விநியோகிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் முடிந்ததும் டோக்கனுக்கு பணம் அல்லது பரிசு பொருள் வழங்கப்படும் என்று அக்கட்சியினரால் உறுதி அளிக்கப்பட்டது.
தேர்தல் முடிந்து 10 நாட்கள் ஆகியும் இதுவரை தி.மு.க., தரப்பிலிருந்து எதுவும் வழங்கப்படவில்லை.
இனியும் பணமோ அல்லது பரிசு பொருளோ கொடுப்பார்களா அல்லது ஏமாற்றி விடுவார்களா என்பது தெரியாமல் டோக்கனை பத்திரப்படுத்தி வைத்து, எதிர்பார்ப்புடன் வாக்காளர்கள் காத்திருக்கின்றனர்
-நமது நிருபர்-.