/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
எப்போது?போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு..' கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் அவதி.
/
எப்போது?போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு..' கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் அவதி.
எப்போது?போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு..' கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் அவதி.
எப்போது?போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு..' கள்ளக்குறிச்சியில் பொதுமக்கள் அவதி.
ADDED : ஏப் 23, 2024 06:11 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு அதிகாரிகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகரில் பல ஆண்டுகளாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக உள்ளது. பஸ் நிலையம் நான்கு முனை சந்திப்பையொட்டி அமைந்துள்ளதால், பஸ்கள் உள்ளே மற்றும் வெளியே செல்லும் இடங்கள் வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவில் வாகனங்கள் நகரைக் கடந்து செல்லும்போது நெரிசல் மேலும் அதிகரிக்கிறது.
கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்திலிருந்து சென்னை, சேலம், திருவண்ணாமலை, கடலுார், திருச்சி, கோவை, பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.
கிராமப்புறம் மற்றும் வெளியூர் செல்லும் பஸ்கள் என நாள்தோறும் 1,000க்கும் மேற்பட்ட பஸ்கள் பஸ் நிலையத்தைக் கடந்து செல்கிறது. மேலும், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் இங்கிருந்து பயணம் மேற்கொள்கின்றனர்.
கடந்த 2019ம் ஆண்டு முதல் கள்ளக்குறிச்சி புதிய மாவட்டமாக உதயமாகி இயங்கி வருகிறது. தற்போது பல்வேறு அரசு அலுவலகங்கள் கள்ளக்குறிச்சியில் செயல்படுவதால், பொதுமக்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி நகரின் நான்கு முக்கிய சாலையிலும் வாகன போக்குவரத்து மிகுதியால், போக்குவரத்து பாதிப்பு என்பது தொடர்கதையாக உள்ளது. ஆம்புலன்ஸ்கள், மாவட்ட அரசு உயர் அதிகாரிகளின் வாகனங்களும் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.
மாவட்டத்தின் தலைநகரமான கள்ளக்குறிச்சியில் வாகன பெருக்கத்திற்கேற்ப பஸ் நிலையம், சாலை வசதி இன்றி உள்ளது. இதற்கிடையே 3 நாட்கள் விடுமுறை கழித்து, நேற்று வெளியூருக்குச் செல்லும் பயணிகளின் வருகைகள் அதிகரித்தால், பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
அதேபோல் வழக்கத்தை விட அரசு பஸ்களின் போக்குவரத்து அதிகரித்தது. இதனால் தியாகதுருகம், சேலம் சாலை என நகரின் முக்கிய சாலைகளிலும் நீண்ட துாரம் வாகனங்கள் அணிவகுத்து ஊர்ந்து சென்றன.
தற்போது கடும் வெயில் காய்ந்து வரும் நிலையில் வாகன நெரிசலால் இரு சக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் மற்றும் ஊர்ந்து சென்ற பஸ்களால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கள்ளக்குறிச்சியில் நாள்தோறும் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

