/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதலுார் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
/
முதலுார் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
முதலுார் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
முதலுார் ஏரியில் ஆக்கிரமிப்பு அகற்றுவது எப்போது? விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 26, 2025 05:13 AM

திருக்கோவிலூர்: முதலுார் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார் அடுத்துள்ள முதலுார் கிராமத்தில் 150 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. நீர்வளத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் பெரும்பாலான பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நீர் பிடிப்பு பகுதியில் 25 ஏக்கருக்கு மேல் பலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர்.இவர்கள், ஏரியில் தண்ணீர் நிரம்பினால் பயிர்கள் பாதிப்பதை தவிர்க்க இரவு நேரங்களில் ஏரியிலிருந்து தண்ணீரை வெளியேற்ற கலுங்கல் பகுதியை சேதப்படுத்துகின்றனர்.
இதன் காரணமாக ஏரி மூலம் பயன்பெறும் 250 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்கள் ஒருபோக சாகுபடிக்கே தத்தளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தால் மட்டுமே அதனை அகற்ற முடியும். இதற்கு வருவாய்த் துறையினர் முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு மேலோங்கியுள்ளது.
முதலுார் ஏரிக்கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் வீடுகள், கொளப்பாக்கம் கிராமத்தினர் நீர் பிடிப்பு பகுதியை ஆக்கிரமித்து பயிர் செய்திருக்கும் பகுதிகள், காட்டுபையூர் கிராம எல்லை பகுதி என மூன்று பக்கமும் அளவீடு செய்தால் மட்டுமே ஏரியின் முழு ஆக்கிரமிப்பை அகற்ற முடியும்.
ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றினால், ஏரி மூலம் பயன்பெறும் 250 ஏக்கர் விளை நிலங்கள் முப்போக சாகுபடி செய்யலாம். அதற்கு, அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.