/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மகள்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
/
மகள்களுடன் மனைவி மாயம்: கணவர் புகார்
ADDED : செப் 08, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே மகள்களுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.
சின்னசேலம் அடுத்த நமச்சிவாயபுரத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் மனைவி சரண்யா,34; இவர், கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். கடந்த மே மாதம் சொந்த ஊரான நமச்சிவாயபுரத்திற்கு வந்த சரண்யா, தனது மகள்கள் சமையா, 12; சந்தியா, 10; இருவரையும் அழைத்து கொண்டு திருப்பூர் செல்வதாக பாண்டியனிடம் கூறிச் சென்றவர் அங்கு செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து பாண்டியன் அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.