ADDED : மே 30, 2024 06:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி கணவன் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கச்சிராயபாளையம் அடுத்த மாத்துார் கிராமத்தை சேர்ந்த மணிவேல் மனைவி உஷா,22; கடந்த 23ம் தேதி காலை 8 மணியளவில் மனைவி உஷா, உலகங்காத்தானில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கணவன் மணிவேலிடம் தெரிவித்து விட்டு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் உஷா வீட்டிற்கு வரவில்லை. இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் உஷாவை தேடியுள்ளனர்.
எங்கு தேடியும் கிடைக்காததால் காணாமல் போன மனைவி உஷாவை கண்டுபிடித்து தரக்கோரி, அவரது கணவர் மணிவேல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.