/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விலை போய் விடுவார்களோ? 'மாஜி' அமைச்சருக்கு கிலி
/
விலை போய் விடுவார்களோ? 'மாஜி' அமைச்சருக்கு கிலி
ADDED : ஏப் 05, 2024 11:59 PM
திருக்கோவிலுார்: ஆளும் கட்சிக்கு யாரும் விலை போய் விடக்கூடாது என தனது கட்சி நிர்வாகிகளிடம் மாஜி அமைச்சர் சண்முகம் கேட்டுக் கொண்டார்.
விழுப்புரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட திருக்கோவிலுார் நகராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் பாக்யராஜை ஆதரித்து முன்னாள் அமைச்சர் சண்முகம் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது, அ.தி.மு.க., நகர நிர்வாகிகளை அழைத்து, யாரும் எதிர்கட்சிகளுக்கு விலை போய் விடக்கூடாது. கட்சிக்கு உண்மையாக, விசுவாசமாக உழைத்தால் கட்சி பதவி கிடைக்கும், உள்ளாட்சி பதவிகள் கிடைக்கும் எனவே நமக்குள் இருக்கும் மன கசப்புகளை மறந்து ஒற்றுமையாக இருந்து ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
அவ்வாறு செயல்பட்டால் நாம் வெற்றி பெறுவது உறுதி என நிர்வாகிகளுக்கு அறிவுரை வழங்கினார். இதைக் கேட்ட நிர்வாகி ஒருவர் சக நிர்வாகியிடம் அமைச்சருக்கு ஏன் நம்மேல் இந்த திடீர் பயம் என கேட்க அதற்கு மற்றொரு நிர்வாகி எல்லாம் பா.ஜ., பயம்தான் என்றார்.

