/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா?
/
பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படுமா?
ADDED : செப் 11, 2024 01:49 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பெருகி வரும் ஜனத்தொகைக்கு ஏற்ப நகரின் கட்டமைப்பு வளர்ச்சிகள் பெறாமல் உள்ளது.
கிராமப்புறபங்களில் உள்ளவர்கள், பிள்ளைகளின் கல்விக்காக கள்ளக்குறிச்சி நகருக்கு இடம் பெயர்கின்றனர். இதனால் கள்ளக்குறிச்சியில் குடியிருப்புகள் பெருகி வருகின்றன.
ஆனால் நகரில் போதிய வசதிகள் இல்லை. கழிவு நீர் கால்வாய்கள் முழுமையாக இல்லாததால், நகரில் சேகரமாகும் ஒரு பகுதி கழிவுநீர் கோமுகி நதியிலும் மற்றொரு பகுதியில் சேகரமாகும் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதுடன், சித்தேரி, தென்கீரனுார் உள்ளிட்ட ஏரிகளிலும் கலக்கிறது.
மேலும் விநாயகா நகர், எம்.ஆர்.என். நகர், ராஜாராம் நகர், திருவேங்கடம் நகர் போன்ற விஸ்தரிப்பு பகுதிகளில் கழிவு நீர் கால்வாய் வசதி இல்லாததால், அப்பகுதி கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளில் குளம்போல் தேங்கி நிற்கிறது.
மழைக்காலங்களில் துார்ந்து போன சாக்கடைகளில் கழிவுநீர் வழிந்தோடாமல் சாலையோரங்களில் வழிந்தோடி, சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அப்பகுதிகளில் கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது.
எனவே, கள்ளக்குறிச்சி நகரில், இருந்து கழிவுநீரை வெளியேற்றிடும் வகையில், பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.