/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை
/
பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை
ADDED : மார் 28, 2024 11:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே வயிற்று வலியால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்த இளம்பெண் இறந்தார்.
சின்னசேலம், வானக்கொட்டாயைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மனைவி கோபிகாஸ்ரீ, 19; இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை வயிற்று வலி அதிகமானதால், கோபிகாஸ்ரீ வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்தார்.
உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கோபிகாஸ்ரீ நேற்று முன்தினம் இறந்தார்.
புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

