/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டயர் வெடித்து கார் மரத்தில் மோதிய விபத்தில் பெண் பலி: 3 பேர் படுகாயம்

ADDED : செப் 05, 2024 09:51 PM
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே காரின் டயர் வெடித்து மரத்தில் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
சின்னசேலம் அடுத்த கடத்துார் சேர்ந்தவர் காங்கமுத்து,40; இவர் நேற்று பகல் 1.30 மணியளவில் தனது மனைவி அற்புதவள்ளி,35; மகன் கோபி,14; மகள் கோபிகா,12; ஆகியோருடன் மாருதி காரில் கச்சிராயபாளையம் நோக்கி சென்றார். நமச்சிவாயபுரம் ஓடப்பர் கோவில் அருகே சென்றபோது காரின் இடது பக்க முன்டயர் வெடித்து சாலையோரத்தில் இருந்த பனை மரத்தின் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அற்புதவள்ளி சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும் விபத்தில் படுகாயமடைந்த காங்கமுத்து, அவரது பிள்ளைகள் கோபி, கோபிகா ஆகியோரை பொதுமக்கள் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தகவலறிந்த சின்னசேலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த அற்புதவள்ளியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.