ADDED : ஜூலை 13, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த விளந்தையைச் சேர்ந்தவர் சின்னராஜ் மனைவி வச்சளா, 57; கடந்த 9ம் தேதி இரவு 8:00 மணி அளவில் திருக்கோவிலூர் சென்று, விளந்தை பஸ் நிறுத்தத்தில் பஸ்சில் இருந்து இறங்கி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார்.
திருக்கோவிலூர் மார்க்கத்தில் இருந்து மணலூர்பேட்டை நோக்கி பின்னால் அதிவேகமாக பைக்கை ஓட்டி வந்தவர் வச்சலா மீது மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
அவரை தீவிர சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.