ADDED : மார் 14, 2025 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாயமான பெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி, குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்த வினோத் மனைவி மகாலட்சுமி,32; இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த, 11 ம் தேதி தனது பாட்டியை பார்க்க செல்வதாக கூறி வீட்டை விட்டு கிளம்பினார். அதன் பிறகு மீண்டும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து வினோத், கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.