/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுாறு நாள் சம்பளம் குறைந்ததால் பெண்கள் சாலை மறியல்
/
நுாறு நாள் சம்பளம் குறைந்ததால் பெண்கள் சாலை மறியல்
நுாறு நாள் சம்பளம் குறைந்ததால் பெண்கள் சாலை மறியல்
நுாறு நாள் சம்பளம் குறைந்ததால் பெண்கள் சாலை மறியல்
ADDED : ஆக 01, 2024 07:37 AM

திருக்கோவிலுார்: அரகண்டநல்லுார் அடுத்த சு.பில்ராம்பட்டில் 100 நாள் வேலை திட்டத்தில் குறைவான சம்பளம் வழங்கியதாக பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அரகண்டநல்லுார் அடுத்த சு.பில்ராம்பட்டு, வேடாளம் பகுதியைச் சேர்ந்த சிலரது வங்கிக் கணக்கில் 100 நாள் வேலை திட்டத்தில், தினசரி கூலியாக நாள் ஒன்றுக்கு 303 ரூபாய்க்கு பதில், 199 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து நேற்று காலை 8:30 மணியளவில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் திருக்கோவிலுார் - கண்டாச்சிபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து சென்ற அரகண்டநல்லுார் சப் இன்ஸ்பெக்டர் லியோ சார்லஸ், ஊராட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பணிக்காலங்களில் குறைவான நேரம் வேலை செய்தவர்களுக்கு குறைவாக சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் முழு நேர பணியில் ஈடுபட்டால், அனைவருக்கும் முழுநேர சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, அனைவரும் 9:00 மணியளவில் கலைந்து சென்றனர்.