/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி பள்ளியில் மகளிர் தின விழா
/
ஊராட்சி பள்ளியில் மகளிர் தின விழா
ADDED : மார் 08, 2025 02:09 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த வடசிறுவளுர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சங்கை தமிழ் சங்கம் மற்றும்
திருக்குறள் பேரவை சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. சங்கை தமிழ் சங்க தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் செல்லக்கண்ணு வரவேற்றார். ஊராட்சி தலைவர் சத்யபாமா, இன்னர் வீல் கிளப் தலைவர் சுபாஷினி, தமிழ் படைப்பாளர் சங்க தலைவர் நெடுஞ்செழியன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ் சங்க தலைவர் சவுந்தர்ராஜன் முன்னிலை வகித்தனர்.
மகளிர் தின முக்கியத்துவம் குறித்து இன்னர்வில் கிளப் முன்னாள் தலைவர் தீபா பட்டி மன்ற பேச்சாளர் லட்சுமிபதி மற்றும் பள்ளி மாணவர்கள் பேசினர். தமிழ்செம்மல் விருது பெற்ற விருகாவூர் சண்முகம் பிச்சப்பிள்ளை கவுரவிக்கப்பட்டார்.
மாணவர்களுக்கு மாவட்ட வணிகர் பேரவை பொருளாளர் முத்துக்கருப்பன், கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன்,கம்பன் கழக பொருளாளர் அம்பேத்கர்,மஞ்சுளா, அகல்யா ஆகியோர் பரிசு வழங்கினர். பள்ளி ஆசிரியர்கள் செம்பன், முகமது கவுஸ், அசினா, சாந்தகுமார், நதியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்கை தமிழ் சங்க பொருளாளர் சாதிக்பாஷா நன்றி கூறினார்.