/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முதலாளி வீட்டில் 17 சவரன் திருடிய தொழிலாளி கைது
/
முதலாளி வீட்டில் 17 சவரன் திருடிய தொழிலாளி கைது
ADDED : ஜூன் 06, 2024 12:55 AM

கள்ளக்குறிச்சி,:கள்ளக்குறிச்சியில் முதலாளி வீட்டில் 17 சவரன் நகையை திருடிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலகர், 55, சோப் கம்பெனி உரிமையாளர். கம்பெனியில் 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்த வருகின்றனர். மே 27 அன்று சொந்த வேலை காரணமாக துாத்துக்குடிக்கு திலகர் சென்றிருந்தார்.
கம்பெனியில், 5 ஆண்டாக வேலை செய்து வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த ஜெயராஜ் மகன் ஜெயக்குமார், 32, திலகரை மறுநாள் போனில் தொடர்பு கொண்டு, மனைவிக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறிவிட்டு சொந்த ஊருக்கு சென்றார்.
மே 30ல் ஊர் திரும்பிய திலகர், உடனடி பணத் தேவைக்காக நகையை அடகு வைக்க, பீரோ லாக்கரை திறந்த போது, வைத்திருந்த 17 சவரன் நகைகளை காணவில்லை. திடுக்கிட்ட திலகர் தன் மனைவி மற்றும் கம்பெனி ஊழியர்களிடம் விசாரித்தார். அப்போது, விடுப்பில் சென்ற ஜெயக்குமார் தனியாக ஒரு பை எடுத்து சென்றது தெரிய வந்தது.
சந்தேகமடைந்த திலகர், 30ம் தேதி கள்ளக்குறிச்சி போலீசில் புகார் அளித்தார். அதன்படி, இன்ஸ்பெக்டர் ஆனந்தன், பயிற்சி சப் - இன்ஸ்பெக்டர் கவுதமன் ஆகியோர் மயிலாடுதுறைக்கு சென்று ஜெயக்குமாரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் நகைகளை திருடியதை ஒப்புக் கொண்டார்.
அதன்படி, போலீசார் அவரை கைது செய்த போலீசார், 17 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.