/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி
/
கிணற்றில் விழுந்து தொழிலாளி பலி
ADDED : மார் 05, 2025 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம்: அனுமனந்தல் கிராமத்தில் மின் மோட்டாரை சரி செய்தபோது தவறி கிணற்றில் விழுந்த தொழிலாளி இறந்தார்.
சின்னசேலம் அடுத்த அனுமனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அங்கமுத்து, 50; விவசாய கூலித் தொழிலாளி. இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் உள்ள மின்மோட்டார் பழுதாகியது.
அதனை சரி செய்ய நேற்று மதியம் 1:00 மணியளவில் கிணற்றில் இறங்கினார். அப்போது, தவறி விழுந்து, தலையில் பலத்த காயமடைந்து நீரில் மூழ்கினார். தகவல் அறிந்து சென்ற சின்னசேலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் அங்கமுத்துவின் உடலை மீட்டனர். சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.