ADDED : செப் 11, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே ஏரியில் மூழ்கி கூலி தொழிலாளி இறந்தார்.
உளுந்துார்பேட்டை அடுத்த மடப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிவேல் மகன் அஜித்குமார், 27; கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் 2:00 மணியளவில் குடிபோதையில் மடப்பட்டு ஏரியில் மீன் பிடிக்க சென்றார். அப்போது ஏரி தண்ணீரில் மூழ்கி அஜித்குமார் மாயமானார்.
தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, ஏரியில் இறங்கி அஜித்குமாரின் உடலை மீட்டனர்.
பின், பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். திருநாவலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

