/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மரத்தில் பைக் மோதல் தொழிலாளி பலி
/
மரத்தில் பைக் மோதல் தொழிலாளி பலி
ADDED : ஆக 27, 2024 04:00 AM
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே புளியமரத்தின் மீது பைக் மோதிய விபத்தில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார்.
சின்னசேலம் அடுத்த நைனார்பாளையத்தை சேர்ந்தவர் பாண்டு மகன் மாரிமுத்து,42; கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பைக்கில் சொரக்கபாளையத்திலுள்ள ேஹாட்டலுக்கு சென்றுள்ளார். மாரிமுத்து ஓட்டி சென்ற பைக் நிலை தடுமாறி, சாலையோர புளியமரத்தின் மீது விபத்துக்குள்ளானது.
இதில் மாரிமுத்துவுக்கு படுகாயம் ஏற்பட்டது. தகவலறிந்த அவரது குடும்பத்தினர் பலத்த காயங்களுடன் இருந்த மாரிமுத்துவை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து நேற்று காலை உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.