/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பணியிட பாலியல் புகார்: உதவி எண் 181ல் புகார் அளிக்கலாம்
/
பணியிட பாலியல் புகார்: உதவி எண் 181ல் புகார் அளிக்கலாம்
பணியிட பாலியல் புகார்: உதவி எண் 181ல் புகார் அளிக்கலாம்
பணியிட பாலியல் புகார்: உதவி எண் 181ல் புகார் அளிக்கலாம்
ADDED : மார் 05, 2025 11:20 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணியிட பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து, உதவி எண், 181ல், பெண்கள் புகார் அளிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
உலக மகளிர் தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில், பணியிடத்தில் பெண்களை பாலியல் வன்கொடுமையிலிருந்து பாதுகாக்கும் சட்டம்- 2013 குறித்த பயிற்சி பட்டறை கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. இதில் அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக பணிக்கு சேர்ந்த, பெண் பணியாளர்கள் கலந்து கொண்டனர். சமூக ஆர்வலர் மற்றும் பயிற்றுனர் மூலம் சட்டங்கள், பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் பணியிடத்தில் பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டால், அதுகுறித்து அங்கேயே உள்ளக குழுவில் புகார் அளிக்கலாம். இந்த குழுவில் புகார் அளிப்பவரின் விபரம், பொதுவெளியில் தெரிவிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டு தீர்வு கிடைக்க வழி செய்யப்படும்.
அனைத்து அலுவலகங்களிலும் உள்ளகக் குழு அமைத்தல் மற்றும் அதன் விபரம் மற்றும் முக்கியத்துவம் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.புகார் பெட்டி, உள்ளக குழு, உதவி எண் 181 மற்றும் இணையதளம் வழியாக புகார்களை தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.