தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பயிலரங்கம்  

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பயிலரங்கம்  

ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் பயிலரங்கம்  


ADDED : செப் 24, 2026 05:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 24, 2026 05:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஆங்கிலத்துறை சார்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கிற்கு கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். துணை முதல்வர் அசோக் முன்னிலை வகித்தார். ஆங்கில துணைத்தலைவர் சக்திபிருந்தா வரவேற்றார். புல முதல்வர்கள் சக்திவேல், லோரா வாழ்த்துரை வழங்கினர்.

21ம் நுாற்றாண்டில் தகவல் தொடர்பு திறன்களை பயன்படுத்தி, தடைகளை தாண்டி வாழ்க்கையில் சாதிப்பது குறித்து கருத்தரங்கம் நடந்தது. மாணவி நந்திகா ஸ்ரீ சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக மதுரை சுயதொழில் பயிற்றுநர் நித்யரேவதி பங்கேற்று, பட்டதாரிகள் நேர்க்காணலில் பங்கேற்கும் போது என்னென்ன செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது, தினமும் நேரத்தை எப்படி பயன்படுத்த வேண்டும், தகவல் தொடர்பு திறன்களை பயன்படுத்தி வாழக்கையில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்பது குறித்து பேசினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் கவிதா, சுரேந்தின், சண்முகசுந்தரம், ஹேமலதா, சக்திவேல், அருண்குமார் ஆகியோர் செய்திருந்தனர். மாணவி ஜோனா அலெக்சியா நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us