/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தனியார் பஸ் மோதி இளம்பெண் பலி
/
தனியார் பஸ் மோதி இளம்பெண் பலி
ADDED : மார் 12, 2025 10:12 PM
கச்சிராயபாளையம்; கச்சிராயபாளையம் அருகே தனியார் பஸ் மோதி, பைக்கில் சென்ற இளம்பெண் பலியானார்.
கச்சிராயபாளையம் அடுத்த மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிபாரதி, 36; இவரது மனைவி பிரேமா 27, இவர் ஊராட்சியில் கணக்கெடுக்கும் பணி செய்து வந்தார். இருவரும் நேற்று முன்தினம் காலை 11:30 மணியளவில் கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் சென்றனர். தோப்பூர் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பின்னால் அக்கராயபாளையம் பகுதியைச் சேர்ந்த கோதண்டபாணி மகன் சகாயம் என்பவர் ஓட்டி வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்ததில்,
சம்பவ இடத்திலேயே பிரேமா இறந்தார். கச்சிராயபாளையம் போலீசார், அவரது உடலை மீட்டு, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த மணிபாரதியை, அதே மருத்துவமனையில் சேர்த்தனர்.
புகாரின் பேரில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.