/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளைஞர்கள் தொழில் திறன் மேம்பாடு: கலெக்டர் உத்தரவு
/
இளைஞர்கள் தொழில் திறன் மேம்பாடு: கலெக்டர் உத்தரவு
ADDED : மார் 15, 2025 06:26 AM

கள்ளக்குறிச்சி; மாவட்டத்தில் திறன் மேம்பாட்டு திட்டத்தில் தொழில்களை ஊக்குவிக்கும் வகையில் திறன் குழு கூட்டம் நேற்று நடந்தது.
மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி பிரிவு சார்பில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார்.
தனித்துவமான தொழில்களுக்குரிய திறன் சார்ந்த பயிற்சிகள், பயிற்சி முடித்தவர்கள் மற்றும் வேலை வாய்ப்பு பெற்றவர்களின் எண்ணிக்கை, பயிற்சி முடித்தவர்களுக்கு வழங்கிய சான்றிதழ்கள், பள்ளி, கல்லுாரிகளில் மேற்கொண்ட திறன் பயிற்சிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் குறித்து ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, இளைஞர்களின் தொழில் திறன்களை மேம்படுத்தவும், வெளிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து வட்டார வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும்.
திறன் பயிற்சிகள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
கூட்டத்தில் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.