/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிலம்பம் வீரர்களுக்கு யுவ நட்சத்திரா விருது
/
சிலம்பம் வீரர்களுக்கு யுவ நட்சத்திரா விருது
ADDED : ஆக 29, 2024 08:21 AM

கள்ளக்குறிச்சி: மதுரை மாவட்டத்தில் நடந்த மாநில அளவிலான இளைஞர் கலை மற்றும் கலாசார விழாவில் கள்ளக்குறிச்சி பகுதியை சேர்ந்த சிலம்பம் வீரர்களுக்கு யுவ நட்சத்திரா விருது வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அடுத்த மரகதமாளிகையில், 'தி யுனிவெர்செல் நட்சத்திர ஆர்ட் அண்ட் கல்ச்சுரல் பவுண்டேஷன்' சார்பில் மாநில அளவிலான இளைஞர் கலை மற்றும் கலாசார விழா - 2024 நடந்தது.
இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மாவட்ட, மாநில அளவில் நடந்த சிலம்பம், கராத்தே, பரதம், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் சிறப்பிடம் வெற்ற 215 மாணவ, மாணவிகளை தேர்வு செய்து விருது வழங்கப்பட்டது.
பவுண்டேஷன் தலைவர் ஆச்சார்யா கண்ணன், நிர்வாகி முத்துக்குமார் பிள்ளை, அண்ணாமலை பல்கலைகழக முனைவர் எழில்ராமன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு விருது வழங்கினர்.
இதில், கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சி இந்திய தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கலைக்கூட சிலம்ப வீரர்கள் தர்ஷன், தணுாஷ்குமார், மதிநிலவன் மற்றும் மோகனப்பிரியா ஆகியோருக்கு யுவ நட்சத்திரா விருதும், தலைமை பயிற்சியாளர் ஜெயபாலுக்கு சேவை கலாரத்னா விருதும் வழங்கப்பட்டது.

