/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
1 டன் அரிசி பறிமுதல் இருவருக்கு வலை
/
1 டன் அரிசி பறிமுதல் இருவருக்கு வலை
ADDED : பிப் 23, 2024 03:54 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டாடா சுமோவில் கடத்தப்பட்ட 1 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து, இருவரை தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் செண்பகவள்ளி மற்றும் போலீசார் நேற்ற மாலை ரோடுமாமந்துார் பிரிவு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சங்கராபுரம்- கள்ளக்குறிச்சி நோக்கி வந்த டாடா சுமோ காரை (டி.என் 27 கே 9298) போலீசார் நிறுத்த முயன்றபோது, நிற்காமல் சென்றது.
போலீசார் விரட்டிச் சென்றபோது, காரை நிறுத்தி விட்டு இருவர் தப்பி சென்றனர். காரை சோதனை செய்ததில் ஒரு டன் ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து டாடா சுமோ மற்றும் ஒரு டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்தனர். தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனர்.