ADDED : ஏப் 04, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையில் 10 போலீஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க போலீஸ் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்ட எல்லையான மூலக்காடு, பரிகம், செம்பாக்குறிச்சி, கூத்தக்குடி, தேவியானந்தல், அத்திப்பாக்கம், திருக்கோவிலுார், முருக்கம்பாடி, மூங்கில்பாடி, வி.கூட்டுரோடு ஆகிய 10 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்களுடன் கூடிய சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
