/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
10 பேருக்கு கிராம உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கல்
/
10 பேருக்கு கிராம உதவியாளர் பணிக்கான ஆணை வழங்கல்
ADDED : செப் 05, 2025 07:41 AM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 பேர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வேலு வழங்கினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் பிரசாந்த் தலைமையில், அமைச்சர் வேலு நேற்று வழங்கினார். எம்.எல்.ஏ.க்கள் ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், சங்கராபுரம் உதயசூரியன், கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் ஆகியோர் பங்கேறறனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலகில் பணிபுரிந்து பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 பேர்களுக்கு கிராம உதவியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை அமைச்சர் வேலு வழங்கினார்.
புதிய அரசு பணியில் சேர்ந்துள்ளவர்கள் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என அமைச்சர் வேலு அறிவுறுத்தினார். இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, திருக்கோவிலுார் துணை ஆட்சியர் ஆனந்த்குமார்சிங், கள்ளக்குறிச்சி நகர்மன்ற தலைவர் சுப்ராயலு, தொடர்புடைய அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.