/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
/
வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 14, 2025 07:16 AM
கள்ளக்குறிச்சி; வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகையை திருடிச் சென்ற ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர்.
கள்ளக்குறிச்சி கேசவலு நகரைச் சேர்ந்தவர் காமல்பாட்ஷா மனைவி ஜமிலாபேகம்,47; இவர் கடந்த 2024ம் ஆண்டு ஆக.,26 ம் தேதி வீட்டை பூட்டி விட்டு மகளின் பிரசவத்திற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு சென்று சேர்த்துள்ளார்.
பின்னர் மகளுக்கு பிரசவம் முடிந்து மீண்டும் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து உள்ளே 10 சவரன் தங்க நகையை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து ஜமிலாபேகம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

