/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
/
10 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
ADDED : பிப் 26, 2026 05:38 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மாவட்டத்தில் ஏற்கனவே பணிபுரிந்த இடத்தில் இருந்து கல்வராயன்மலை தனி தாசில்தாராக காதர் அலி, உளுந்துார்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தராக பாலகுரு, திருக்கோவிலுார் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக கோபாலகிருஷ்ணன், உளுந்துார்பேட்டை ஆதி திராவிடர் நல தனி தாசில்தாராக கண்ணன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராக ஆனந்தகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி தாசில்தாராக சேகர், வாணாபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பசுபதி, கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக நளினி, சின்னசேலம் குடிமை பொருள் தனி தாசில்தாராக அருள்மொழி ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

