UPDATED : நவ 12, 2026 04:15 PM
ADDED : நவ 12, 2026 04:12 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த் துறையில் 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பத்மஜா உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த் துறையில் வெவ்வேறு அலுவலகங்களில் தாசில்தார் நிலையில் பணிபுரிந்த அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தனி தாசில்தாராக பணிபுரிந்த பரந்தாமன், உளுந்துார்பேட்டை தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலர் மணிமேகலை சங்கராபுரம் தாசில்தாராகவும், உளுந்துார்பேட்டை பாலசுப்ரமணியன் மாநில நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., வின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த ராஜலட்சுமி, கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலராக பணிபுரிந்த விஜயபிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், திருக்கோவிலுார் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த அனந்தசயனன் கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக பணிபுரிந்த ராமகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ.,வின் நேர்முக உதவியாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சங்கராபுரம் தாசில்தாராக பணிபுரிந்த வைரக்கண்ணன் கள்ளக்குறிச்சி கோட்ட கலால் அலுவலராகவும், உளுந்துார்பேட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராக பணிபுரிந்த கண்ணன் திருக்கோவிலுார் சப் கலெக்டரின் நேர்முக உதவியாளராகவும், மாநில நெடுஞ்சாலைகள் நில எடுப்பு தனி தாசில்தாராக பணிபுரிந்த சசிகலா உளுந்துார்பேட்டை ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தில் 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பத்மஜா உத்தரவிட்டுள்ளார்.
