ADDED : மார் 30, 2026 07:44 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
கள்ளக்குறிச்சி அடுத்த மாடூரில் அங்கன்வாடி பணியாளர்கள் சமையல் காஸ் சிலிண்டர்கள் மற்றும் வாகனங்களில் 100 சதவீத ஓட்டுப்பதிவிற்கான ஸ்டிக்கர்கள் ஓட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கள்ளக்குறிச்சி டவுன் பஸ் நிலையத்தில் மகளிர் சுய உதவிக்குழுவினர் ரங்கோலி வரைந்து, துண்டு பிரசுரம் வழங்கி, செல்பி பாயிண்டில் புகைப்படம் எடுத்து, நடனக்கலைஞர்கள் மூலமாகவும் 100 சதவீதம் ஓட்டுப்பதிவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தொடர்ந்து சின்னசேலம் அடுத்த மூங்கில்பாடி மற்றும் குதிரைச்சந்தல் கிராமங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர் மருதாணி வரைதல், பலுான் பறக்க விடுதல், உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் 100 சதவீத ஓட்டுப்பதிவிற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
'ஓட்டு என்பது நமது உரிமை' என்பதை கருத்தில் கொண்டு, வாக்காளர்கள் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அதிகாரி பிரசாந்த் தெரிவித்தார்.
கல்லுாரியில் விழிப்புணர்வு கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டில் இயங்கி வரும் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவினை வலியுறுத்தி கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாணவ, மாணவிகள் நடனமாடி இளம் தலைமுறையினர் அனைவரும் தவறாமல் தேர்தலில் ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
