/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கலையநல்லுாரில் 104 மி.மீ., மழை பதிவு
/
கலையநல்லுாரில் 104 மி.மீ., மழை பதிவு
ADDED : நவ 25, 2025 05:02 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பதிவான மழை அளவு மி.மீ., விபரம்:
கள்ளக்குறிச்சி 75, தியாகதுருகம் 52, விருகாவூர் 42, கச்சிராயபாளையம் 49, கோமுகி அணை 30, மூரார்பாளையம் 11, வடசிறுவள்ளூர் 17.50, கடுவனுார் 34, மூங்கில்துறைப்பட்டு 6, அரியலுார் 14, சூளாங்குறிச்சி 57, ரிஷிவந்தியம் 35, கீழ்பாடி 20, கலையநல்லுார் 104, மணலுார்பேட்டை 13, மணிமுக்தா அணை 73, வாணாபுரம் 15, மாடாம்பூண்டி 23, திருக்கோவிலுார் வடக்கு 18, திருப்பாலப்பந்தல் 19, வேங்கூர் 31.60, பிள்ளையார்குப்பம் 15, எறையூர் 18, உ.கீரனுார் 39 என மாவட்டம் முழுவதும் 811.10 மி.மீ., அளவு மழை பெய்தது. மாவட்டத்தில் சராசரியாக 33.80 மி.மீ., மழை பதிவானது.
ஆடு, மாடு பலி கள்ளக்குறிச்சி தாலுகா, சித்தலுார் கிராமத்தை சேர்ந்த முத்து என்பவரது பசுமாடு மின்னல் தாக்கி நேற்று முன்தினம் இறந்தது.
அதேபோல், உளுந்துார்பேட்டை அடுத்த தேவியானந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரது ஆடு மின்னல் தாக்கி இறந்தது.
மேலும், கள்ளக்குறிச்சி அடுத்த பெத்தானுார் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி செல்லம்மாள் என்பவரது கூரை வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதமடைந்தது.

