/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கங்கையம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்
/
கங்கையம்மன் கோவிலில் 108 பால்குடம் ஊர்வலம்
ADDED : ஜூலை 26, 2025 08:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கங்கையம்மன் கோவி லில் ஆடி வெள்ளிகிழமை யொட்டி, 108 பால்குட ஊர்வலம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சிராய பாளையம் சாலையில் உள்ள கங்கையம்மன் கோவிலில் ஆடி 2வது வெள்ளி கிழமையான நேற்று, உலக நன்மை வேண்டி 108 பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது.
முன்னதாக, கோமுகி நதிக்கரையில் இருந்து ஆலய மகளிர் குழுவினர் மற்றும் பொதுமக்கள் 108 பால் குடத்துடன் தேரோடும் வீதிகளின் ஊர்வலமாக சென்றனர்.
தொடர்ந்து, மூலவர் கங்கையம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து தீபாராதனை நடந்தது.
விழா ஏற்பாடுகளை கங்கையம்மன் ஆலய மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.