/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் மாற்றம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் மாற்றம்
ADDED : அக் 27, 2025 12:07 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் துறையில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனி தாசில்தார் வாசுதேவன், சங்கராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், அங்கு பணியாற்றிய கோபாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., வின் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோட்ட கலால் அலுவலர் சிவசங்கரன், கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், ஆர்.டி.ஓ., வின் நேர்முக உதவியாளர் விஜயபிரபாகரன், கோட்ட கலால் அலுவலராகவும், உளுந்துார்பேட்டையில் தனி தாசில்தார் மணிமேகலை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தனி தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சின்னசேலம் தாசில்தார் பாலகுரு, உளுந்துார்பேட்டை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், உளுந்துார்பேட்டை தாசில்தார் ஆனந்தகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலராகவும், திருக்கோவிலுார் தாசில்தார் ராமகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளராக மாற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி தனி தாசில்தார் சிலம்பரசன், சின்னசேலம் தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலர் பாலசுப்ரமணியன், உளுந்துார்பேட்டை தாசில்தாராகவும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரின் நேர்முக உதவியாளர் வினோத்பாபு, திருக்கோவிலுார் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ளார்.

