ADDED : ஏப் 04, 2026 10:01 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பணம் வைத்து சூதாடிய 13 பேரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி இந்திரா நகர் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். அங்கு, சீனுவாசன் என்பவரது வீட்டிற்குள் சிலர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது.
பணம் வைத்து சூதாடிய வீட்டின் உரிமையாளர் சீனுவாசன், 39; குதிரைச்சந்தலை ரத்தினவேல், 28; எழிலரசன், 34; மணிகண்டன், 36 ; மணிமாறன், 28; மணி, 30; மோரப்பாதை நந்தகுமார், 43; மலைக்கோட்டாலம் வினோத், 28; தியாகதுருகம் மணியன்,38; குமார், 48; ரோடுமாமந்துார் முத்தரசு ,28; வாணியந்தல் அருள்பாண்டியன், 31; கள்ளக்குறிச்சி மணிகண்டன், 35; ஆகிய 13 பேரை கைது செய்து, ரூ.53,100 பணத்தை பறிமுதல் செய்தனர்.
