/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் 14 மி.மீ., மழை
/
கள்ளக்குறிச்சியில் 14 மி.மீ., மழை
ADDED : டிச 01, 2024 07:01 AM
கள்ளக்குறிச்சி : 'பெஞ்சல்' புயலையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மதியம் 12:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை இடைவிடாமல் மழை பெய்தது. மாலை 6:00 மணி நிலவரப்படி, பெய்த மழை அளவு (மி.மீ.,) விபரம்:
கள்ளக்குறிச்சி - 10, தியாகதுருகம் -2, விருகாவூர் -5, கச்சிராயபாளையம் -5, கோமுகி அணை -3, மூரார்பாளையம்- 16, வடசிறுவள்ளூர்- 19, கடுவனுார்- 13, மூங்கில்துறைப்பட்டு -12, அரியலுார்- 11, சூளாங்குறிச்சி- 16, ரிஷிவந்தியம் -15, கீழ்பாடி- 19, கலையநல்லுார்- 18, மணலுார்பேட்டை -28, சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை -10, வானாபுரம்- 13, மாடாம்பூண்டி- 17.5, திருக்கோவிலுார் வடக்கு -34.5, திருப்பாலப்பந்தல் -15.5, வேங்கூர் -31, ஆதுார் -12.3, எறையூர் -5, உ.கீரனுார் -13 என 343.8 மி.மீ., அளவு மழை பெய்தது. சராசரியாக மாவட்டத்தில் 14.325 மி.மீ., மழை பதிவானது.
மரக்காணம் 84 மி.மீ. மழை
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை 4:30 மணி வரை 394 மி.மீ. மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு மி.மீ., விபரம்: மரக்காணம் 84, வானுார் 79.60, திண்டிவனம் 62.20, மேல்மலையனுார் 40, செஞ்சி, 35.90, விக்கிரவாண்டி 33.30, விழுப்புரம் 26.70, கண்டாச்சிபுரம் 21.70, திருவெண்ணெய்நல்லுார் 10.60 மி.மீ., மழை பதிவானது. மாவட்டத்தில் சராசரியாக 43.78 மி.மீ. மழையும், மொத்தமாக 394 மி.மீ. மழை பதிவானது.

