/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 சப் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
ADDED : செப் 27, 2025 02:29 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14 சப்இன்ஸ்பெக்டர்களை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட குற்ற பதிவுகள் பணியகத்தில் சப்இன்ஸ்பெக்டர் மலர்விழி கள்ளக்குறிச்சி சட்டம், ஒழுங்கு போலீஸ் நிலையத்திற்கும், உளுந்துார்பேட்டை மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு பிரபாவதி திருக்கோவிலுாருக்கும், சின்னசேலம மாணிக்கம் கச்சிராயபாளையத்திற்கும், வடபொன்பரப்பி ஏழுமலை, தியாகதுருகத்தில் பணிபுரிந்த ஞானசேகரன் ஆகிய இருவரும் கள்ளக்குறிச்சிக்கும், சங்கராபுரம் பிரபு, தியாகதுருகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல், கள்ளக்குறிச்சி பரிமலா, விஜயராகவன் முறையே சின்னசேலம் மற்றும் கச்சிராயபாளையத்திற்கும், கரியாலுாரில் பணிபுரிந்த ராமர் மாவட்ட குற்ற பதிவுகள் பணியகத்திற்கும், உளுந்துார்பேட்டை குமரேசன் திருநாவலுாருக்கும், திருக்கோவிலுார் அஜித்குமார் சங்கராபுரத்திற்கும், எடைக்கல்லில் பணிபுரிந்த ராமதாஸ் மணலுார்பேட்டைக்கு, திருப்பாலபந்தலில் பணிபுரிந்த சலாம்உசைன் வடபொன்பரப்பிக்கும் மாற்றப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட எஸ்.பி., மாதவன் வெளியிட்டுள்ளார்.