UPDATED : மே 01, 2026 04:34 PM
ADDED : மே 01, 2026 04:02 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பேலட் யூனிட் இயந்திரத்தில் பதிவாகியுள்ள ஓட்டுகளை எண்ணும் பணிக்காக ஒவ்வொரு தொகுதிக்கும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளிலும் பதிவான ஓட்டுகள் வரும் 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதையொட்டி ஒவ்வொரு தொகுதியிலும் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் 'ஸ்ட்ராங்க் ரூமில்' இருந்து 14 'பேலட் யூனிட்' இயந்திரங்கள் ஓட்டு எண்ணும் இடத்திற்கு கொண்டு வரப்படும். அங்கு ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும் பேலட் யூனிட் இயந்திரங்கள் மீண்டும் எடுத்து செல்லப்பட்டு, அடுத்த சுற்றுக்கு மீண்டும் 14 இயந்திரங்கள் எடுத்து வரப்படும்.
அதன்படி, உளுந்துார்பேட்டை மற்றும் கள்ளக்குறிச்சி (தனி) தொகுதிகளில் பதிவான ஓட்டுக்கள் 27 சுற்றுகளாக எண்ணப்படும்.
அதேபோல், ரிஷிவந்தியம் மற்றும் சங்கராபுரம் தொகுதிகளில் பதிவான ஓட்டுகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.
இதுதவிர, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், முதியவர்கள், ராணுவ வீரர்கள் செலுத்திய தபால் ஓட்டுகளை எண்ணுவதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் தனியாக 4 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளது.
