/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்பாடப்பிரிவில் சேர ஆர்வம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14,964 விண்ணப்பங்கள் குவிந்தன
/
அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்பாடப்பிரிவில் சேர ஆர்வம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14,964 விண்ணப்பங்கள் குவிந்தன
அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்பாடப்பிரிவில் சேர ஆர்வம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14,964 விண்ணப்பங்கள் குவிந்தன
அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்பாடப்பிரிவில் சேர ஆர்வம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 14,964 விண்ணப்பங்கள் குவிந்தன
ADDED : ஜூன் 11, 2024 07:02 AM
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 2 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், இளநிலை வகுப்புகளில் சேர்ந்து பயில ஆன்லைன் மூலமாக 14,964 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
பிளஸ்-2 முடித்த மாணவ, மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளநிலை வகுப்புகளில் சேர, கடந்த மே 6ம் தேதி முதல் 24ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், அரசு கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை மையம் அமைத்து விண்ணப்பிக்கப்பட்டது.
மாவட்டத்தில், கள்ளக்குறிச்சி மற்றும் ரிஷிவந்தியம் என இரண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இதில், கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் (அடைப்புக்குறிக்குள் துறை வாரியாக புதிய மாணவர் சேர்க்கை எண்ணிக்கை) பி.ஏ., தமிழ்(70), ஆங்கிலம்(70), பி.காம்.,(70), பி.எஸ்சி., கணினி அறிவியல்(50), கணிதம்(70), வேதியியல்(50), இயற்பியல்(50) என 7 இளநிலை பாடப்பிரிவுகள் உள்ளன. மொத்தமாக 430 மாணவ, மாணவிகளை சேர்க்கலாம்.
இதில், தமிழ் பாடப்பிரிவில் - 2,579, ஆங்கிலம் - 1,411, பி.காம்., - 1,095, பி.எஸ்சி., கணினிஅறிவியல் - 1,738, கணிதம் - 533, வேதியியல் - 1,627, இயற்பியல் - 759 என மொத்தமாக 9,742 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
அதேபோல், ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., தமிழ்(70), பொருளாதாரம்(70), பி.காம்.,(70), பி.எஸ்சி., கணினி அறிவியில்(50), புள்ளியியல்(50) ஆகிய 5 இளநிலை பாடப்பிரிவுகளில், 310 மாணவ, மாணவிகளை சேர்க்கலாம்.
இதில், தமிழ் பாடப்பிரிவில் சேர 2,062 விண்ணப்பங்கள், பொருளாதாரம் - 824, கணினி அறிவியல் - 1,304, புள்ளியியல் - 218, பி.காம்., - 814 என மொத்தமாக 5,222 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் - 430, ரிஷிவந்தியம் கல்லுாரியில் - 310 என மொத்தமாக 740 மாணவர்களை சேர்க்கலாம். இந்த 740 இடத்திற்கு 14,964 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தற்போது மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடந்து வருகிறது.
குறிப்பாக, மற்ற பாடங்களை விட, தமிழ் பாடப்பிரிவுக்கு அதிகளவு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை கலந்தாய்வுகள் முடிந்த பிறகு, தமிழக அரசு அனுமதித்தால் ஒரு பாடத்துறைக்கு 20 சதவீதம் கூடுதல் சேர்க்கை நடைபெறும்.