/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின் கம்பத்தில் பஸ் மோதல் பக்தர்கள் 15 பேர் படுகாயம்
/
மின் கம்பத்தில் பஸ் மோதல் பக்தர்கள் 15 பேர் படுகாயம்
மின் கம்பத்தில் பஸ் மோதல் பக்தர்கள் 15 பேர் படுகாயம்
மின் கம்பத்தில் பஸ் மோதல் பக்தர்கள் 15 பேர் படுகாயம்
ADDED : ஜன 05, 2025 05:01 AM

திருக்கோவிலுார் :  திருக்கோவிலுார் அருகே, மின் கம்பத்தில் பஸ் மோதிய விபத்தில், மேல்மருவத்துார் பக்தர்கள் 15 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த மோட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த 60 பேர், மேல்மருவத்துார் கோவிலுக்கு சென்றுவிட்டு, நேற்று முன்தினம் மாலை தனியார் பஸ்சில் ஊருக்கு புறப்பட்டனர்.
நேற்று முன்தினம் இரவு 11:40 மணிக்கு திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில், மணலுார்பேட்டை அடுத்த அருதங்குடி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் மோதி, வயலில் கவிழ்ந்தது.
இதில் மின் கம்பம் சாய்ந்து, மின் கம்பிகள் அருந்தது. சத்தம் கேட்டு அருகில் இருந்த கிராம மக்கள் ஓடி வந்து மின்சாரத்தை துண்டித்து பஸ்சில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதில் மோட்டம்பட்டியை சேர்ந்த  சாந்தி,38; லட்சுமி,26; ராணி,53; சுதா,33; இவரது மகள் யுவஸ்ரீ,13; உள்ளிட்ட 15 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்த திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் திருப்பாலபந்தல், மணலுார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களை மீட்டு  திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களை வசந்தம் கார்த்தியேன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டின் பேரில் மாற்று வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தை நேற்று காலை கலெக்டர் பிசாந்த் பார்வையிட்டார். விபத்து குறித்து திருப்பாலபந்தல் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

