/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேனீக்கள் கொட்டியதில் 15 பெண்கள் காயம்
/
தேனீக்கள் கொட்டியதில் 15 பெண்கள் காயம்
ADDED : செப் 28, 2024 07:18 AM

கள்ளக்குறிச்சி : அம்மகளத்துாரில் 5 வயது சிறுமி உட்பட 15 பெண்களை தேனீக்கள் கடித்து காயமடைந்தனர்.
சின்னசேலம் அடுத்த அம்மகளத்துாரில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 70க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 10:30 மணியளவில் அம்மகளத்துார் - உலகியநல்லுார் பாசன வாயக்காலை சீரமைத்து கொண்டிருந்தனர். அப்போது மரத்தில் இருந்த தேனீக்கள் கலைந்து பொதுமக்களை கடித்தது. இதனால் அச்சமடைந்தவர்கள் பதறியடித்து ஓடினர்.
இதில், அம்மகளத்துார் சசிகலா, 30; சவரி, 26; பார்வதி, 29; சுமதி, 40; அஞ்சலை, 55; வள்ளி, 50; ராஜேஸ்வரி, 26; இவரது மகள் சரிதாஸ்ரீ, 5; உட்பட 15 பேர் காயமடைந்தனர். அனைவரும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், மேல்சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டனர்.