/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 152 வீடுகள் பகுதியளவு சேதம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 152 வீடுகள் பகுதியளவு சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 152 வீடுகள் பகுதியளவு சேதம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 152 வீடுகள் பகுதியளவு சேதம்
ADDED : டிச 03, 2024 06:44 AM
கள்ளக்குறிச்சி: பெஞ்சல் புயலின் தாக்கத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 152 வீடுகள் பகுதியவும், 12 வீடுகள் முழுவதுமாகவும் சேதமடைந்துள்ளன. 41 கால்நடைகள் உயிரிழந்தன.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெஞ்சல் புயலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், கடந்த 30 மற்றும் 1ம் தேதிகளில் இடைவிடாமல் மழை பெய்தது. தொடர் மழையால் மாவட்டத்தில் 117 கூரை வீடுகளும், 35 ஆல்பெட்டாஸ் ஷீட், ஓடு, மெத்தை வீடுகளும் பகுதியளவு சேதமடைந்தன. மேலும், 12 கூரை வீடுகள் முழுமையாக சேதமடைந்தது. இது தவிர, 8 பசு மாடு, 1 காளை மாடு, 17 கன்றுகுட்டி மற்றும் 15 ஆடுகள் என 41 கால்நடைகள் உயிரிழந்தன. 2 கால்நடை கொட்டகைகள் சேதமடைந்தது.
இயற்கை பேரிடரால் வீடுகளை இழந்தவர்கள் மற்றும் இறந்த கால்நடை உரிமையாளருக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, பகுதியளவு மற்றும் முழுவதுமாக சேதமடைந்த கூரை வீட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது.
பகுதியளவு சேதமடைந்த ஆல்பெட்டாஸ் ஷீட், ஓடு மற்றும் மெத்தை வீடுகளின் உரிமையாளர்களுக்கு ரூ.6,500 வழங்கப்படுகிறது. அதபோல், ஒரு பசு மாட்டிற்கு ரூ.37,500, காளை மாட்டிற்கு 32 ஆயிரம், கன்று குட்டிகளின் வயதை பொறுத்து அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரையிலும், ஆட்டிற்கு ரூ.4 ஆயிரமும், கால்நடை கொட்டகைக்கு 3 ஆயிரமும் அரசு சார்பில் நிவாரணமாக வழங்கப்படுகிறது.