/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.15.41 லட்சம் மோசடி செய்தவருக்கு வலை

ADDED : அக் 05, 2024 04:59 AM
கள்ளக்குறிச்சி : அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.15.41 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி,62; இவர், ஓ.பி.எஸ்., தொண்டர்கள் மீட்புக்குழு அணி நகர செயலாளராக உள்ளார். இவருக்கு, கோயம்புத்துார் மாவட்டம், பொத்தனுாரை சேர்ந்த ரகுமான் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ரகுமான், புண்ணியமூர்த்தியின் மகன் மற்றும் மருமகனுக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறினார். அதனை நம்பிய புண்ணியமூர்த்தி, கடந்த 2023ம் ஆண்டு 4 தவணைகளில் ரூ.15.41 லட்சம் கொடுத்தார்.
ஆனால், ரகுமான் கூறியபடி வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் தராமல் ஏமாற்றி வந்தார்.
இதுகுறித்து புண்ணியமூர்த்தி அளித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, ரகுமானை தேடி வருகின்றனர்.