sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ஆம்னி பஸ் மீது லாரி மோதி விபத்து 3 டிரைவர்கள் உட்பட 16 பேர் காயம்

/

ஆம்னி பஸ் மீது லாரி மோதி விபத்து 3 டிரைவர்கள் உட்பட 16 பேர் காயம்

ஆம்னி பஸ் மீது லாரி மோதி விபத்து 3 டிரைவர்கள் உட்பட 16 பேர் காயம்

ஆம்னி பஸ் மீது லாரி மோதி விபத்து 3 டிரைவர்கள் உட்பட 16 பேர் காயம்


ADDED : செப் 25, 2025 11:43 PM

Google News

ADDED : செப் 25, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: உளுந்துார்பேட்டை அருகே ஆம்னி பஸ் பின்னால் லாரி மோதியதில், பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 3 டிரைவர்கள் உட்பட 16 பேர் காயமடைந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் செந்தில், 54; ஆம்னி பஸ் டிரைவர். இவர் ராமநாதபுரம் முதுகுளத்திலிருந்து 29 பயணிகளுடன் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக நேற்று முன்தினம் இரவு சென்னைக்கு சென்று கொண்டிருந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த ஆசனுார் சிட்கோ அருகே இரவு 1:45 மணியளவில் பின்னால் வந்த லாரி பஸ் மீது மோதியது.

இதில் நிலை தடுமாறிய பஸ் சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் டிரைவர் செந்தில், மாற்று டிரைவர் கமுதி பகுதியைச் சேர்ந்த வீரபாண்டி, 50; சென்னை, பழவந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த நாகேஸ்வரன், 24; தாம்பரம் முகமது இப்ராஹிம், 16; ராமநாதபுரம் மாவட்டம், அபிரம் பகுதியைச் சேர்ந்த முத்தம்மாள், 63; முதுகளத்துார் தினேஷ்குமார், 21; சோலையூர் சரஸ்வதி, 62; கமுதி அடுத்த பேரையூர் கோபு, 32; மற்றும் லாரி டிரரைவர் தேனி மாவட்டம், உத்தமபாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 35; உட்பட 16 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும், உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

விபத்து குறித்து எடைக்கல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us