/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து வினாடிக்கு 16,100 கன அடி தண்ணீர் திறப்பு

ADDED : டிச 03, 2024 06:51 AM

கள்ளக்குறிச்சி: சூளாங்குறிச்சி மணிமுக்தா அணையில் இருந்து வினாடிக்கு 16,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதால், மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் கரை புரண்டோடியது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சூளாங்குறிச்சியில் 36 அடி உயரம் (736.96 மில்லியன் கன அடி) கொள்ளளவு கொண்ட மணிமுக்தா அணை உள்ளது. கல்வராயன்மலையில் விழும் மழை நீர் மணி மற்றும் முக்தா ஆறுகள் வழியாக அணைக்கு வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி அணையில் 23.20 அடி உயரத்திற்கு (120.85 மில்லியன் கன அடி) தண்ணீர் இருந்தது. பெஞ்சல் புயல் காரணமாக கன மழை பெய்ததால் நீர் வரத்து ஏற்பட்டு, நேற்று முன்தினம் இரவு அணை நிரம்பியது.
அணையின் மொத்த கொள்ளளவான 36 அடியில், 34 அடி உயரம் (590 மில்லியன் கன அடி) உயரத்திற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அணைக்கு நீர்வரத்தாக இருந்த விநாடிக்கு 16,100 கன அடி தண்ணீர் புதிய ெஷட்டர்கள் வழியாக மணிமுக்தா ஆற்றில் வெளியேற்றப்பட்டது.
அதிகளவு தண்ணீர் திறக்கப்பட்டதால், மணிமுக்தா ஆற்றில் தண்ணீர் கரை புரண்டோடியது. நேற்று மழை இல்லாததால் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு முற்றிலுமாக குறைந்தது. இதையடுத்து, அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு மதியம் 2 மணி நிலவரப்படி விநாடிக்கு 10 ஆயிரமாகவும், 6 மணிக்கு 5 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டது.