/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் மாற்றம்
/
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் மாற்றம்
ADDED : நவ 02, 2025 04:14 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த் துறையில் 17 துணை தாசில்தார்கள், 6 முதுநிலை வருவாய் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த்துறையில் துணை தாசில்தார் நிலையில் பணிபுரியும் 17 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, திருக்கோவிலுார் தலைமையிடத்து துணை தாசில்தாராக பணிபுரிந்த சதீஷ்குமார், வாணாபுரம் தேர்தல் துணை தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
திருக்கோவிலுார் தேர்தல் துணை தாசில்தார் கங்காலட்சுமி, அதே அலுவலகத்தில் தலைமையிடத்து துணை தாசில்தாராகவும், வாணாபுரம் தேர்தல் துணை தாசில்தாராக பணிபுரிந்த தேவதாஸ், கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் பணிபுரிந்த சுகந்தி, சங்கராபுரம் மண்டல துணை தாசில்தாராகவும், கலெக்டர் அலுவலகத்தில் ஜிபிரிவில் பணிபுரிந்த சக்திவேல் கல்வராயன்மலை தலைமையிடத்து துணை தாசில்தாராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல், மாவட்டம் முழுதும் 17 துணை தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.
முதுநிலை ஆர்.ஐ.,கள் மாற்றம் மேலும், முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில் பணிபுரியும் 6 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஐ பிரிவில் பணிபுரிந்த கல்யாணி, ஜே பிரிவில் பணிபுரிந்த துரை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் பணிபுரிந்த நிறைமதி ஆகிய மூவரும் வாணாபுரம் தாசில்தார் அலுவலகத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
வாணாபுரம் தாசில்தார் அலுவலகத்தில் பணிபுரிந்த ஸ்ரீராம், ராஜ்பிரசாத் முறையே கலெக்டர் அலுவலகம் மற்றும் ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் அலுவலகத்திற்கும், டி.ஆர்.ஓ., அலுவலகத்தில் பணிபுரிந்த சின்னமணி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் மற்றும் பாதுகாப்பு அலுவலகத்திற்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தமாக 6 முதுநிலை வருவாய் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து டி.ஆர்.ஓ., ஜீவா உத்தரவிட்டுள்ளார்.

