/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலையில் கஞ்சா சாகுபடி செய்த 2 பேர் கைது
/
கல்வராயன்மலையில் கஞ்சா சாகுபடி செய்த 2 பேர் கைது
ADDED : டிச 20, 2024 05:56 AM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் கஞ்சா செடி சாகுபடி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்க, கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலையில் சிறப்பு அதிரடிப்படையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான அதிரடிப்படை போலீசார் கல்வராயன்மலையில் உள்ள பெருமாநத்தம் கிராமத்தில் சோதனை நடத்தினர்.
அங்குள்ள வனப்பகுதியில் 1,600 கஞ்சா செடிகள் சாகுபடி செய்து இருப்பது தெரியவந்தது. கஞ்சா செடி சாகுபடி செய்த அதே பகுதியைச் சேர்ந்த முனியன் மகன் பருவதம், 43; பூஞ்சோலை மகன் கோவிந்தன், 32; ஆகிய இருவரையும் கைது செய்தனர். 100 கிலோ கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.