ADDED : ஜூலை 09, 2026 09:52 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே வீட்டில் குட்கா பதுக்கிய மாமனார் மருமகனை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த காட்டுப்பையூர் கிராமத்தில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று நாராயணன், 50; என்பவர் வீட்டை சோதனையிட்டனர்.
அங்கு, 90 கிலோ குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவரது மருமகன் தேவனுாரைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் அசோக்பாரதி, 33; ஆந்திராவில் இருந்து ரயில் மூலம் குட்காவை கடத்தி வந்து வீட்டில் பதுக்கி வைத்ததும் தெரிந்தது.
இதுகுறித்து போலீசார் நாராயணன் மற்றும் அசோக்பாரதி மீது வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து, குட்காவை பறிமுதல் செய்தனர்.
