/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது விற்பனைக்கு உடந்தை 2 ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
/
மது விற்பனைக்கு உடந்தை 2 ஏட்டுகள் 'சஸ்பெண்ட்'
ADDED : அக் 26, 2025 03:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்றவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக, போலீஸ் ஏட்டுகள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் ஏட்டுகளாக பணிபுரிபவர்கள் பிரேம்நாத், சுந்தரவர்தன். இருவரும், கள்ளத்தனமாக மது பாட்டில் விற்றவர்களுக்கு உடந்தையாக இருந்தததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து எஸ்.பி., மாதவன், விசாரணை நடத்தியதில் உண்மை என தெரியவந்தது. அதைடுத்து, பணியின்போது ஒழுங்கீனமாக செயல்பட்டதாக பிரேதம்நாத், சுந்தரவர்தன் இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்து, எஸ்.பி., உத்தரவிட்டார்.

