ADDED : ஜூன் 24, 2025 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே கடையில் குட்கா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, முடியனுார் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் குமரேசன், 25; தனது பெட்டிக் கடையில் குட்கா பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தது தெரிந்தது. விசாரணையில், கடலுார் மாவட்டம், காட்டுமைலுார் கிராமத்தைச் சேர்ந்த இளையராஜா,43; என்பவரிடமிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து, குமரேசன், இளையராஜா ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்து, குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.