/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
/
மது பாட்டில்கள் விற்ற 2 பேர் கைது
ADDED : ஜூன் 23, 2025 08:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் சாராயம் விற்ற, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் சபரிமலை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கரடிசித்துார், தாவடிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது, அந்த பகுதியில் கோவிந்தராஜ் மகன் அண்ணாமலை, 39; என்பவர் அவரது வீட்டிற்கு அருகே மதுபாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரை கைது செய்த போலீசார், 15 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல தாவடிப்பட்டு கிராமத்தில் மதுபாட்டில்களை விற்பனை செய்த, சுப்ரமணி மகன் சக்தி வடிவேலு, 47; என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்து, 9 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.